சுஜா வருணி திருமண வரவேற்பு: கார்த்தி வந்தாக, ப்ரோ கணேஷ் வந்தாக, இன்னும்… | Celebs attend Suja Varunee, Shiva Kumar wedding reception


சிவகுமார்
சுஜா வருணி, சிவகுமாரின் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை லதா கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார். 11 ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் நேற்று கணவன், மனைவி ஆகியுள்ளனர்.

ஷாரிக்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான ஷாரிக் தனது அம்மா உமா ரியாஸுடன் வந்திருந்தார்.

விஜி
நடிகை விஜி சந்திரசேகர் தனது மகளுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

ரம்யா
பிக் பாஸ் பிரபலம் பாடகி ரம்யா சுஜா வருணிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

ஸ்ரீப்ரியா
நடிகை ப்ரியா தனது கணவர் ராஜ்குமாருடன் வந்து பொறுப்பாக திருமணத்தை நடத்திக் கொடுத்தார். வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

ஜனனி
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனி சுஜா வருணியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சந்தியா
காதல் படம் மூலம் பிரபலமான நடிகை சந்தியா தனது கணவர், மகளுடன் சுஜா வருணி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டார்.

பிந்து மாதவி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்ட ஆரவ், பிந்து மாதவி தங்கள் தோழியை வாழ்த்த வந்திருந்தனர்.

டேனி
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி புகழ் டேனி சுஜா வருணியின் திருமண வரவேற்புக்கு வந்திருந்தார்.

வாழ்த்து
நடிகர் பிரசன்னா சுஜா வருணி, சிவகுமாரை நேரில் வந்து வாழ்த்தினார்.

வையாபுரி
அண்ணன் வையாபுரி தனது குடும்பத்துடன் வந்து தங்கச்சியை வாழ்த்தினார்.

கணேஷ் வெங்கட்ராம்
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நன்கு பழக்கமான ப்ரோ கணேஷ் வெங்கட்ராம் தனது மனைவியுடன் வந்திருந்தார்.

ரகுமான்
நடிகர் ரகுமான் தனது மனைவியுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

கார்த்தி
நடிகர் கார்த்தி தனது தந்தை சிவகுமாருடன் வந்து சுஜா, சிவகுமாரை வாழ்த்தினார்.