சேனாபதி தாத்தா இஸ் பேக்: கெத்தா, அலப்பறையா துவங்கிய இந்தியன் 2 #Indian2 | Indian 2 team starts shooting


bredcrumb

Shooting Spot

oi-Shameena

By Siva

|

சென்னை: இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

1996ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். இந்தியன் 2 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அறிவித்தபடி படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.

தாத்தா

தாத்தா

இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்க விழாவில் கமல் ஹாஸன் இந்தியன் தாத்தா கெட்டப்பில் கெத்தாக வந்திருந்தார். முதல் பாகத்தை போன்றே இதுவும் மிகப் பெரிய வெற்றி அடையும் என்பதில் சந்தேகமே இல்லை.

மாஸ்

மாஸ்

இந்தியன் தாத்தா படம் கொண்ட போஸ்டர்களை சென்னை நகர் முழுவதும் ஒட்டி படப்பிடிப்பு துவங்குவதையே அலப்பறையாக விளம்பரம் செய்துள்ளது தயாரிப்பு நிறுவனமான லைகா.

கொண்டாட்டம்

இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியுள்ளதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் கமல் ரசிகர்கள். அவர் நடிக்கும் கடைசி படம் என்ற வேதனை ஒரு பக்கம் இருந்தாலும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

லிஸ்ட்டு

லிஸ்ட்டு

தாத்தா மேஜையில் இருக்கும் ஃபைல்களை பார்த்தால் வேட்டையாட வேண்டியவர்களின் லிஸ்ட்டு ரொம்ப பெரிதாக இருக்கும் போன்று. அரசியல்வாதியான கமல் ஊழல்வாதிகளை வேட்டையாடுவதை உடனே பார்க்கும் ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் படத்தை எடுத்து முடிக்கும் வரை காத்திருக்க வேண்டியதை தவிர வேறு வழியில்லை.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *