‘தர்மபிரபு’வுக்காக யோகி பாபு எடுத்த அதிரடி முடிவு… புகழ்ந்து தள்ளும் படக்குழு! | Yogi Babu and entire ‘Dharma Prabhu’ team turn vegetarian on sets


bredcrumb

Shooting Spot

oi-Rajendra Prasath

|

சென்னை: தான் ஹீரோவாக நடிக்கும் படத்துக்காக நடிகர் யோகி பாபு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவின் பிஸியான காமெடியன் என்றால் அது யோகி பாபு தான். தூங்கக் கூட நேரம் இல்லாமல் படங்களில் நடித்து வருகிறார்.

Yogi Babu and entire ‘Dharma Prabhu’ team turn vegetarian on sets

விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதால் அவரது மார்க்கெட்டும், சம்பளமும் வெகுவாக உயர்ந்துள்ளது. காமெடியான மட்டுமில்லாமல் காமெடி ஹீரோவாகவும் யோகி பாபு நடிக்கிறார்.

அப்படி அவர் நடிக்கும் படம் தான் தர்மபிரபு. இந்த படத்தில் எமதர்ம ராஜாவாக யோகி பாபு நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடி படமாக இது உருவாகி வருகிறது. இந்த படத்துக்காக ரூ.2 கோடி செலவில், பிரமாண்ட எமலோகம் செட் அமைக்கப்பட்டு சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்துக்காக யோகி பாபு ஒரு தியாகம் செய்திருக்கிறார். அதுகுறித்து படக்குழு தெரிவித்திருப்பதாவது, ” தர்மபிரபு படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன் யோகிபாபு, தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் மற்றும் இயக்குநர் முத்துக்குமரன் ஆகியோர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள எமதர்ம ராஜா கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். மேலும், எமதர்ம ராஜாவின் தெய்வீக தன்மையை உறுதிப்படுத்த படப்பிடிப்பு தளத்தில் அசைவ உணவு சமைக்கவும், பரிமாறவும் கூடாது என்று முடிவு செய்துள்ளனர்.

இந்த ஆன்மிக செயல் முறை, படம் வெற்றி பெற நேர்மறையான சூழ்நிலையை அமைத்து கொடுக்கும் என்று நம்புகின்றனர். இதனால் தர்மபிரபு படப்பிடிப்பில் சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்படுகிறது. யோகி பாபு மட்டுமின்றி, படக்குழு முழுவதுமே சைவத்துக்கு மாறியிருக்கின்றனர்”.

2018ம் ஆண்டின் சூப்பர் “ஸ்டார்ஸ்” யாரு.. வாங்க.. ஓட்டுப் போடுங்க!Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *