மண் மனம் மாறாத கிராமத்து வாழ்க்கையை படம் பிடித்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா | Bharathiraja, who portrayed the lives of the villagers


பாரதிராஜா

பாரதிராஜா

தன்னுடை முதல் படைப்பான 16 வயதினிலே படத்திலேயே, யாரப்பா இந்த பாரதிராஜா என்று இந்திய சினிமாவையே தன்னைப் பற்றி பேசவைத்த பெருமைக்கு சொந்தக்காரர். இந்தப் படத்திற்கு பின்பு தான், ஓஹோ இப்படிக் கூட படம் எடுக்கலாமோ என்று இந்திய சினிமாவை யோசிக்க வைத்தவர்.

இயக்குநர் இமயம்

இயக்குநர் இமயம்

இன்று தமிழ் திரையுலகில் வெற்றிபெற்ற கணக்கில் அடங்கா கலைஞர்களின் குருவாக விளங்கியவர் நம் கிராமிய இயக்குனர் பாரதிராஜா என்றல் அது மிகையல்ல. இயக்குனர் இமயம் என்று அவர் அழைக்கப்படுவதற்கு ஏற்ப அவர் இமய மலையை போன்ற அளவு ஆற்றல் படைத்தவர். நம் தமிழ் கலாச்சாரத்தை, கிராமிய நாட்டுப்புற கதைகளை நம் கண் முன்னே அச்சுஅசலாக நிறுத்திக்காட்டியவர்.

தரமான படைப்புகள்

தரமான படைப்புகள்

அவரின் பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில், கல்லுக்குள் ஈரம், முதல் மரியாதை, மண் வாசனை, அலைகள் ஓய்வதில்லை, வேதம் புதிது, கருத்தம்மா, கிழக்கு சீமையிலே, பசும்பொன் போன்ற தரமான படைப்புகள் மூலம் நம்மிடையே மரியாதைக்குரிய மனிதராக கொண்டாடப்பட்டவர்.

கிராமத்து வாழ்க்கை

கிராமத்து வாழ்க்கை

பாரதிராஜாவின் படைப்புகள் கிராமிய மண் வாசனைக்கும், அழுத்தமான நடிப்புக்கும், அழுக்கான உடையனிந்த ஆனால் வெள்ளை மனம் கொண்ட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையையும் சிறப்பாக வெளிப்படுத்துவது அவரது படைப்புகளின் முத்திரை.

பத்மஸ்ரீ பாரதிராஜா

பத்மஸ்ரீ பாரதிராஜா

இந்தியா திரையுலகிற்கு அவர் அளித்த பங்களிப்பை சிறப்பிப்பதற்காக இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.

தமிழ், இந்தி, தெலுங்கு என மொத்தம் நாற்பது படங்களுக்கும் மேலான தரமான படைப்புகள் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் புரட்சியாளர் என்ற பெருமை பாரதிராஜாவையே சேரும்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *