Genelia D’Souza: மீண்டும் நடிக்க ஆசை தான்! ஆனால்.. ஜெனிலியா ஓபன் டாக் – genelia d’souza wants to return to acting but postponing it due to kids


ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலமாக 2003ல் ஹீரோயினாக தமிழில் அறிமுகம் ஆனவர் ஜெனிலியா. அவரது கியூட்டான நடிப்பு இளைஞர்களை அதிகம் கவர்ந்தது. அதற்கு பிறகு சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் என அவர் நடித்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டார் ஜெனிலியா. இருப்பினும் ஒரு சில ஹிந்தி படங்களில் கவுரவ தோற்றத்தில் மட்டும் நடித்துள்ளார் அவர்.

பிரபல ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்ட அவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உல்ளனர். ரியான் தேஷ்முக் மற்றும் ரஹல் தேஷ்முக் என குழந்தைகளுக்கு பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் டிக்டாக்கில் பேசினார். அப்போது அவர் தான் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க விரும்புவதாக கூறினார். ஆனால் தற்போது அவரது குழந்தைகள் இன்னும் சிறியவர்களாக இருப்பதால் அதற்க்கு இன்னும் கொஞ்ச காலம் ஆகும் என கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி மீண்டும் நடிக்க துவங்கிய பிறகு கணவர் ரித்தேஷ் ஜோடியாக ஒரு மராத்தி படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் 2012ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2014ல் ரியான் மற்றும் 2016ல் ரஹல் பிறந்தனர். தற்போது ஒரு குழந்தைக்கு 6 வயது மற்றும் மற்றொரு குழந்தைக்கு 4 வயது தான் ஆகிறது. அதனால் தான் அவர்கள் இன்னும் கொஞ்சம் வளர்ந்தபிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க துவங்குவேன் என ஜெனிலியா கூறியுள்ளார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *