Jr NTR: கடும் ஏமாற்றத்தில் ரசிகர்கள்: ஜூனியர் என்டிஆர் இதயப்பூர்வமான வேண்டுகோள் – jr ntr asks fans to stay inside as a birthday gift for him


நடிகர் ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாள் மே 20ம் தேதி என்பதால் அதை கொண்டாட அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வருகிறார். அதில் ராம் சரனும் நடிக்கிறார். பிறந்தநாளுக்கு டீசர் வரும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என படக்குழு தெரிவித்துள்ளது ரசிகரகளுக்கு ஏமாற்றம் தந்துள்ளது.

ரசிகர்கள் ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை கொண்டாட தயாராகி வரும் நிலையில் அவர் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது..

என்னுடைய அன்பு ரசிகர்ளுக்கு இதயப்பூர்வமான வேண்டுகோள்

இது போன்ற அசாதாரண நேரத்தில் உங்களின் உடல் நலம் மற்றும் உங்களின் அன்பானவர்களின் உடல்நலத்தை காப்பது தான் அவசியம். நாம் ஒன்றாக இதனுடன் போராடி இதில் இருந்து மீண்டு வரலாம்.

ஒவ்வொரு வருடமும், என்னுடைய பிறந்தநாள் அன்று நீங்கள் அளித்து வரும் அன்பு மட்டும் பாசத்தினை நான் மனதில் வைத்திருக்கிறேன். ஆனால் இந்த வருடம், நீனால் எனக்கு தரும் மிகப்பெரிய மற்றும் மதிப்பு மிக்க ஒரு கிப்ட் என்றால் அது நீங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்பது தான்.

மேலும் RRR டீஸர் அல்லது பர்ஸ்ட் லுக் வரும் என காத்திருந்த உங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். உங்களைப் போலவே படக்குழுவும் ஏமாற்றத்தில் தான் இருக்கிறது.

அவர்கள் மிகவும் கடினமாக உழைத்தார்கள், ஒரு சிறப்பான ஒன்றை வெளியிடலாம் என நினைத்தார்கள். ஆனால் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது, மற்ற கட்டுப்பாடுகள் இருப்பதால் அதை படக்குழுவால் முடிக்க முடியவில்லை.

RRR ராஜமௌலி காரு இயக்கி வரும் ஒரு மதிப்புமிக்க படம். அதனால் படத்தின் பைனல் அவுட்புட் சிறப்பாக இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. மீண்டும் உங்கள் அன்புக்கு நன்றி.

இவ்வாறு ஜூனியர் என்டிஆர் கூறியுள்ளார்.

மேலும் படக்குழு வெளியிட்டுள்ள ஒரு விளக்கத்தில் ஏன் ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளுக்கு டீஸர் வெளியிட முடியவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

“எதையாவது ரிலீஸ் செய்தாக வேண்டும் என்பதற்காக நாங்கள் எதையும் ரிலீஸ் செய்ய விரும்பவில்லை. ஆனால் ஒன்றை உறுதியாக கூறுகிறோம், நீங்கள் காத்திருப்பது வீண் போகாது, அது எப்போது வெளிவருகிறோ, அப்போது அது நிச்சயம் மிகப்பெரிய திருவிழாவாக இருக்கும்.”

“மீண்டும் மீண்டும் லாக்டவுன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டு விட்டது. நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் ஜூனியர் என்டிஆரின் கதாபாத்திரத்திற்கான டீசரை முடிக்க முடியவில்லை. அதனால் ஒரு பர்ஸ்ட் லுக் அல்லது ஒரு சிறிய வீடியோவை நாங்கள் வெளியிடவுள்ளோம்” என கூறியுள்ளனர்.

ராஜமௌலி இயக்கிவரும் RRR படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலியா பட் இந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என வதந்திகள் பரவிய நிலையில், அவர் அதை மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2021 ஜனவரி 8ம் தேதி RRR ரிலீஸ் ஆகும் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா லாக்டவுனால் அதிக நாட்கள் வீணாகிவிட்டது. அதனால் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *