Kavin: பிரபல நடிகை உடன் வீடியோ கால் பேசிய கவின்: பிறந்தநாளுக்காக செய்த ஸ்பெஷல் விஷயம் – kavin video call with amritha aiyer to wish for her birthday


கானா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி சீரியல் ஆகியவற்றின் மூலமாக புகழ் பெற்றவர் நடிகர் கவின். லவ் ரொமான்ஸ் என சீரியலில் அவர் நடித்ததால் இளசுகள் பலருக்கு அவருக்கு ரசிகராக மாறிவிட்டனர்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் கிடைத்தனர். இந்நிலையில் தற்போது கவின் லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படத்தில் ஹீரோயினாக பிகில் புகழ் அம்ரிதா அய்யர் நடித்துள்ளார்.

இன்று அம்ரிதாவின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். கவினும் அம்ரிதாவுக்கு வாழ்த்து கூட ஸ்பெஷலான ஒரு விஷயம் செய்துள்ளார். அவருக்கு போனில் வீடியோ கால் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வீடியோ கால் பேசியதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார் கவின்.

“ஹேப்பி பொறந்த நாள் பட்டி.. ஸ்பாட் ல செம போகஸ் உடன் இருந்ததால் ஒரு போட்டோ கூட எடுக்கல நாங்க. இப்போ தான் வேலை இல்லையே, அதான் கஷ்ட பட்டு வீடியோ கால்ல எடுத்தேன்” என கூறியுள்ளார் கவின்.

லிப்ட் படத்தில் ஜோடியாக நடித்துள்ள கவின் மற்றும் அம்ரிதா இருவரும் ஒரு லிப்ட் உள்ளே அமர்ந்து இருப்பது போன்ற ஒரு போஸ்டர் வெளியாகி முன்பு வைரலாகி இருந்தது. அந்த லிப்ட் உள்ளே ரத்தம் தெரிந்திருப்பது போன்றும் இருந்தது. வினீத் வீரபிரசாத் இயக்கியுள்ள லிப்ட் படம் மிகவும் த்ரில்லாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு கவின் நடிக்கும் முதல் படம் இது என்பதாலும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது.

சிரியல்களில் மட்டுமே நடித்து வந்த பிக்பாஸ் கவின் முதலில் ஹீரோவாக அறிமுகம் ஆன படம் 2019ல் வெளிவந்த ‘நட்புனா என்னானு தெரியுமா’ படம் தான். அதற்கு முன்பே அவர் பீசா, இன்று நேற்று நாளை போன்ற படங்களில் பின்னணியில் சில காட்சிகளில் நடித்திருப்பார்.

நட்புனா என்னானு தெரியுமா படம் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில், கவின் அதன் பிறகு படங்களில் நடிக்காமல் பிக்பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக சென்றுவிட்டார். அங்கு அவர் பல பெண் போட்டியாளர்களை ஒரே நேரத்தில் காதலிப்பதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். பொழுதுபோக்காக ரசிகர்கள் பார்க்க நன்றாக இருக்கும் என்பதற்காக காமெடியாக அதை செய்தேன் என அவர் சொன்னாலும், அந்த நிகழ்ச்சியில் அவருக்கு பெரிய தலைவலியை கொடுத்தது அது தான்.

சாக்ஷி அகர்வால் உடன் நெருக்கமாக இருந்து அதன் பிறகு அவரிடம் இருந்து ஒதுங்கி திடீரென லோஸ்லியாவுடன் நெருக்கமானதால் பிக்பாஸ் 3 சீசனில் கவினுக்கு நடந்த பிரச்சனைகளை ஒரு வரியில் கூறிவிட முடியாது.

பிக்பாஸ் வீட்டில் காதலர்களாக வலம் வந்த கவின் மற்றும் லோஸ்லியா இருவரும் அந்த ஷோவில் இருந்து வெளியில் வந்த பிறகு பிரித்துவிட்டார்களா அல்லது இன்னும் காதலில் தான் இருக்கிறார்களா என்பது பற்றி தகவல் எதுவும் இல்லை.

கவின் லிப்ட் படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அதே போல லாஸ்லியாவும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *