Mohandas: சைக்கோ த்ரில்லர் ‘மோகன்தாஸ்’ இரண்டாம் பாகம்: இப்போதே அறிவித்த விஷ்ணு விஷால் – vishnu vishal has plans for mohandas sequel


நடிகர் விஷ்ணு விஷால் அடுத்து நடிக்கவுள்ள படம் மோகன்தாஸ். அந்த படத்தின் டீஸர் சென்ற மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதில் விஷ்ணு சைக்கோ கொலைகாரனாக காட்டப்பட்டு இருந்தார்.

அந்த டீசரில் ஒருவரை சுத்தியலால் அடித்து.. அடித்து.. பல முறை அடித்து.. கொலை செய்கிறார். அதன் பிறகு ரத்தம் சொட்ட சொட்ட அதே சுத்தியை தூக்கி சென்று கண்ணாடி முன்னர் நிற்கிறார். அங்கு சட்டையை கழற்றிவிட்டு ரத்தத்தை தன் உடம்பில் தேய்த்து கொண்டு, அதன் பிறகு சட்டையை அப்படியே எடுத்துச்சென்று வாஷிங் மெஷினில் துவைக்கிறார். இது உண்மை கதையாக இருக்கலாம் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இப்படி படு த்ரில்லிங்காக இருந்த அந்த டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் இன்னொரு ராட்சசன் படமாக இருக்கும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் கமெண்ட் செய்தனர்.

இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் பேசிய நடிகர் விஷ்ணு தனது சினிமா பயணம் பற்றி பல்வேறு விஷயங்களை பேசினார். மோகன்தாஸ் படம் பற்றி பேசிய விஷ்ணு அதன் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டமும் இருக்கிறது என கூறியுள்ளார்.

இன்னும் முதல் பாகத்தின் ஷூட்டிங்கே துவங்கவில்லை. டீசருக்காக தனது அலுவலகத்தில் ஒரு சிறிய பகுதியை மட்டும் ஷூட் செய்ததாக விஷ்ணு முன்பே கூறி இருந்தார். முதல் பாகத்தின் ஷூட்டிங் துவங்கும் முன்பே இப்படி அதன் இரணடாம் பாகம் பற்றி பேசி ஆச்சர்யத்தை கொடுத்துள்ளார் விஷ்ணு.

விஷ்ணு தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக தான் மோகன்தாஸ் படத்தை தயாரிக்கிறார். தற்போது கொரோனா லாக் டவுனால் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு இருந்தாலும் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் அவர்களது சம்பளத்தை முழுமையாக வழங்கியுள்ளார். கொரோனா லாக்டவுனில் விஷ்ணு இப்படி செய்திருப்பது பலராலும் வெகுவாக பாரட்டப் பட்டது.

மோகன்தாஸ் படம் மட்டுமின்றி விஷ்ணு விஷால் கைவசம் மேலும் மூன்று திரைப்படங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக காடன் என்ற படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகம் ஆகிறார் விஷ்ணு. பாகுபலி புகழ் ராணா தான் இந்த படத்தில் மெயின் ரோலில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் படம் ரிலீஸ் ஆகிறது. காடன் ஏப்ரல் 2ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப் பட்டு இருந்தது. அதற்குள் முழு அடைப்பு வந்ததால் அது தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

அடுத்து எப்ஐஆர் என்கிற படத்தை சொந்த தயாரிப்பில் நடித்துள்ளார் விஷ்ணு. Faizal Ibrahim Raiz என்பதை சுருக்கி தான் FIR என படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். பெயரை பார்த்ததுமே புரிந்திருக்கும் இதில் விஷ்ணு இஸ்லாமியராக நடித்துள்ளார் என்று. ஜனவரியில் இந்த படத்தின் டீஸர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விஷ்ணுவின் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்கிற காமெடி படமும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. எழில் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *