naveen: செல்ல மகளுக்கு கொரோனா ஹேர்ஸ்டைல் செய்த மூடர்கூடம் நவீன் – have you seen corona hairstyle?


கொரோனா வைரஸ் ஊர், உலகத்தை எல்லாம் மிரட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியர்களோ கொரோனாவை வைத்து மீம்ஸ் போடுவது, வைரஸ் வடிவத்தில் கொழுக்கட்டை செய்வது என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான நவீன் தன் கடைக்குட்டி செல்லம் லெனிக்கு கொரோனா வைரஸ் மாதிரி ஹேர்ஸ்டைல் செய்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்தவர்களில் சிலர் க்யூட் என்றும், சிலர் நவீன் தன் நிஜப்பெயரை ட்விட்டரில் போட்டுள்ளதை விமர்சிக்கவும் செய்துள்ளனர்.

லெனியின் புகைப்படத்தை பார்த்தவர்கள் அது என்ன சகோ, லெனின்னு பெயர் வைத்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு இன்று பதில் அளித்துள்ளார் நவீன்.

ட்விட்டரில் நவீன் கூறியதாவது,

புரட்சியாளர் லெனின் பிறந்தநாள் இன்று. தோழருக்கு செவ்வணக்கங்கள். அவர் நினைவாக என் கடைக்குட்டிக்கு ‘லெனி’ என்று பெயரிட்டேன். என் லெனி மானுட சமத்துவத்திற்காக வாழும், ஆதிக்கத்தை எதிர்க்கும் போர்குணம் கொண்ட பெண்ணாக வளர வேண்டும் என்பது விருப்பம்
#Lenin
#Leni என்று தெரிவித்துள்ளார்.

நவீன் அளித்த விளக்கத்தை பார்த்த ரசிகர்கள், லெனியை வாழ்த்தியுள்ளனர். நவீன் போன்று நல்ல அப்பா கிடைக்க லெனி கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

#WeLoveDoctors ‘வேலைக்காரன்’ ஸ்டைலில் டாக்டர்களுக்காக ஒரு விஷயம் செய்யச் சொன்ன சிவகார்த்திகேயன்



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *