venkat pakkar: ஜி.வி. பிரகாஷின் 4ஜி பட இயக்குநர் சாலை விபத்தில் பலி: ஷங்கர் என்ன செய்யப் போறாரோ? – gv prakash kumar’s 4g movie director arun prasath dies in road accident


பிரமாண்ட படங்களை எடுப்பதற்கு பெயர் போன இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த அருண் பிரசாத். சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்த அவர் ஷங்கரிடம் தொழில் கற்றுக் கொண்டார்.

அருண் தனது பெயரை வெங்கட் பாக்கர் என்று மாற்றிக் கொண்டு ஜி.வி. பிரகாஷை ஹீரோவாக வைத்து 4ஜி படத்தை இயக்கினார். சி.வி. குமார் தயாரித்துள்ள அந்த படத்தில் காயத்ரி சுரேஷ், சதீஷ், சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தில் நடித்ததுடன் இசையமைக்கவும் செய்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வந்தது. 4ஜி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதமே வெளியிடப்பட்டது. அதே மாதம் படத்திற்கு பூஜை எல்லாம் போட்டார்கள். ஆனால் பட வேலைகளை முடித்து இன்னும் ரிலீஸ் செய்யவில்லை.

லாக்டவுனால் அருண் தனது சொந்த ஊரான அன்னூரில் தங்கியிருந்தார். இன்று காலை அவர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளைத்திற்கு சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருண் இறந்த தகவல் அறிந்த திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆசையாய் எடுத்த முதல் படம் ரிலீஸாகவில்லை, அதை கூட பார்க்காமல் சென்று விட்டாரே என்று ஜி.வி. பிரகாஷின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அருணுக்கு இன்னும் திருணமாகவில்லை. அருணின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக கோலிவுட்காரர்கள் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள். திறமையான இயக்குநர், போகும் வயதா இது. இந்த இறைவன் ஏன் இப்படி செய்கிறான் என்று அருணை பற்றி நன்கு தெரிந்தவர்கள் துக்கம் தாங்காமல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

அருணின் மரணம் குறித்து ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குனர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்…
அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்..
நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகிற்கே நேரம் சரியில்லை போன்று. பிரபலங்கள் நோயால் இறக்கிறார்கள் அல்லது சாலை விபத்தில் பலியாகிறார்கள். இந்த 2020ம் ஆண்டு எப்பொழுது தான் முடியுமோ?. இந்த ஆண்டு துவங்கி 5 மாதங்கள் கூட முடியவில்லை. ஆனால் அதற்குள் ஏகப்பட்ட துக்க சம்பவங்கள் நடந்துவிட்டன. இந்த நிலை இனியும் தொடராமல் இருக்க வேண்டும் என்பதே பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்களின் கவலை.

லாக்டவுன் என்பதால் அருணின் இறுதிச் சடங்கில் அனைவராலும் கலந்து கொள்ள முடியாது. அதை நினைத்தும் சிலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்தியன் 2 பட செட்டில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் பலியானதை பார்த்த ஷங்கர் அந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீண்டு வரவில்லை. இந்நிலையில் அவரின் உதவியாளர் அருண் சாலை விபத்தில் இளம் வயதில் பலியானதை எப்படித் தான் தாங்கப் போகிறாரோ என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியன் 2 செட் விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா. அவர் பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் ஆவார். கிரேன் அந்த மூன்று பேர் மீது விழுந்ததற்கு பதில் என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ஷங்கர் ட்வீட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *