Vijay: தூத்துக்குடியில் தவித்த 11 சென்னை பெண்களுக்கு உதவினாரா நடிகர் விஜய்? – vijay helps 11 chennai women stranded in thoothukudi during corona lockdown


தற்போது கொரோனாவால் போடப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பலருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். வறுமையில் இருக்கும் ரசிகர்களின் வங்கி கணக்குகளில் 5 ஆயிரம் ரூபாய் அவர் டெபாசிட் செய்தார் என்று ரசிகர்கள் ஆதரங்களை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் விஜய் செய்த உதவி பற்றி ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை சேர்ந்த தேவிகா என்ற பெண் தனது குடும்பத்தை சேர்ந்த 11 பெண்களுடன் தூத்துக்குடிக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

திடீரென லாக் டவுன் போடப்பட்டதால் அவர்கள் சென்னை திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டனர். தேவிகா தவிர மற்ற பெண்கள் அனைவருக்கும் வயது 20க்கும் கீழ் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தூத்துக்குடியிலேயே கடந்த ஒரு மாதமாக இருந்த நிலையில், அவர்கள் கையில் இருந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டது. அதனால் அவர்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் இருந்துள்ளனர்.

இது பற்றி தேவிகா விஜய் ரசிகர் மன்றத்தினரிடம் உதவி கேட்டுள்ளார். அது பற்றி நடிகர் விஜய்க்கு ரசிகர்கள்தெரிவித்துள்ளனர். போன் செய்த விஜய் அந்த பெண்களுக்கு உரிய உதவிகள் செய்து சென்னை அனுப்ப ஏற்பாடுகளை செய்யும்படி கூறியுள்ளார்.

அதன் பிறகு தேவிகா மற்றும் மற்ற பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக சென்னை வந்திருக்கின்றனர். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *